Wednesday, 4 February 2015

METAPHOR: POTTERY, POTTER & CLAY

குயவனும் களிமண்ணும் 

ஆதிகாலம் தொட்டு இந்த இணை மாற்வில்லை.  ஆனால் இதை உதாரணமாக காட்டப்படும் கல்விபணி எவ்வளவோ மாறிவிட்டது.  

மனித பரிமாண வள்ர்ச்சியின் காரண்மாக, குழ்ந்தையின் அறியுந்தன்மை அளவிட முடியாத அளவிற்கு அதிகப்பட்டுள்ள்தாக உள்வியலார் கண்டறிந்துள்ளனர்.  இறைவன் படைப்பு மனிதயினத்திறகு அளப்பரிய ஆற்றலை உருவாக்கும் தன்மையை அளித்துள்ளான்.  அது, குழந்தை வள்ர்ப்பில் இருந்து ஆரம்பிக்கிறது.

குழநதை தொட்டு ஆற்றல் மிகு மனிதன் உருவாக்கத்தில் கல்வியின் பணி மகத்தானது. மண், நன்றாகவே உள்ள்து. மண்பாண்ட தேவையும், எதிர்பார்ப்பும் அதிகமாகி கொண்டே உள்ள்து.  ஆனால், குயவனின் செயல் திறன், அறிவு, ஞானம் அதற்குத் தகுந்தாற்போல் பரிணாம வள்ர்ச்சி பெற்றுளளதா? கல்வி நிர்வாகிகளும், கல்வி சார்ந்த அரசாங்க அதிகாரிகளும், கற்றுத் தரும் கட்டமைப்பும்  இங்கு, குயவனாக சித்தரிக்கபடுகின்றனர்.

நடைமுறை கல்விமுறை தெளிந்த, திறமையான இளைய சமுதாயத்தை உருவாக்குவதில் தவறி விட்டதா?

குழந்தை பருவம் நிறைவடையும் முன்பே ஏட்டுக் கல்வி; குழந்தை, தன் உலகம், தன்னிலை என்ன என உணரும் முன்பே இதைதான், இப்ப்டித்தான் படிக்க வேண்டும் என `அரைவேக்காடு கல்வியாள்ர்கள்' நிர்ணயம் செய்துவிடுகிறார்கள். 

டை கட்டுவதிலும், ௲ போடுவதிலும் சிரத்தை கொள்ளும் கல்வி நிலையங்கள் தன் ஒழுக்கததின் முக்கியததை க்ற்ற தருவதில்லை.

எங்கள் காலத்தில் ஒரு வேளை சாப்பாடு கிடைப்பதே அரிது. 

 இப்போது எங்கும், எதிலும் இலவசம்.  சரஸ்வதியை வருந்தாவிட்டால் ப்டிப்பு எங்கனம் சாத்தியம்? பகுத்தறிவு என்ற பெயரில் அதுவும் கெட்டு கிட்க்கிறது.  குடியை பிரதானப்படுத்தும் நடிகர் பின் கூட்டம்.  அந்த படங்களை பாராட்டும் மெத்த படித்த கூட்டம் வேறு.

அது, உயர்கல்வி வரை தொடர்கிறது.  மதிப்பெண் அடிப்படையில், குறிப்பாக ஐ டி பணியில் நுழையும் தகுதி என நிலை உருவாகி இருந்தது, சிறிதுகாலம் முன்பு வரை.

ஐ டி பணியும் அரிதாகி வருகிறது. 

இந்த நிலையில் கிடைத்த பாடபடிப்பிலும் கவனமின்மை, புலமை பெறுவதில் அக்கறையின்மை உள்ளிட்ட குழப்ப நிலையில் உள்ளனர்.
எதிர்காலம் நிச்ச்யமற்ற சூழலில், படித்த இளைய சமுதாயம் தத்தளித்து கொண்டுள்ளது.
காரணம்?

தொட்டில் பழ்க்கம் தொடர்வதாலும், தரமே சரியாக நிர்ணயம் செய்யாமல், தரமற்ற கல்விசாலைகள் அதிகமானதால், படிப்போரின் விகிதாச்சாரம் உயர வேண்டும் என்ற தெளிவற்ற நோக்கத்தில் அரசாங்கமும், அதிகாரம் பெற்ற கல்வியாளர்களும் மாணவ சமுதாயத்திற்கு நல்வழி காட்டத்தவறிவிட்டனர்.
தரமற்றவர்கள் எப்படியேனும் `தகுதி'யை அடைகின்றனர்.  எந்த விலை கொடுத்தாவதும், சூழ்ச்சி செய்தாவதும் `பதவி'யை அடைகின்றனர்.  இல்லாத அதிகாரத்தையும் தன் கைக்கொள் கொண்ர்ந்து, தன் முன்னேற்றம், தன் வளர்ச்சி, தன் புகழ் பாடும் கூட்டத்தை வளர்த்து உயர்கல்வியை செல்லாகாசு ஆக்கி உள்ளனர்.  இவர்கள் குறைந்த எண்ணிக்கையிலே இருந்தாலும் அவர்களது எண்ணமும், செயலும் தரங்கெட்டு உள்ளதால், பொறுப்பற்ற அதிகார கும்பல் சமுதாயத்தை அடக்கி ஆள்வதால் ஏற்பட்டுள்ள சீர்கேடு  புற்று நோய் கிருமி போல் எங்கும் பரவலாகி உள்ளது.

`இந்த தடவையாவது,  காப்பி அடித்தாவது பாஸ் பண்ணிடு.' அம்மா,மகனிடம், தமிழ் சினிமாவில்.
` மர்ர்க், கிரேடு' தான வேண்டும்.. நான் எப்படி வாங்கினா என்ன? நிஜ வாழ்க்கையில்.  பள்ளி, கல்லூரிகளில் தனி நபர் ஒழுக்கம் கெட்டு வருவதாக, பிரபல வார இதழ் தலையங்க கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
விட்டு கொடுத்து, விட்டு கொடுத்து அனைத்தையும் இழந்து, நற்சொல் கேட்க மாட்டோம் என்பதில் மட்டும் பிடிவாதம் வளர்க்க படுகிறது. கேட்டால், தனி நபர் சுதந்திரம் என பிரச்சாரர்கள் வேறு அவர்கள் பங்குக்கு, இளையசமுதாயத்தை சொல் பேச்சு கேளாமையை ஊக்கப்படுத்தும் வண்ணம் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.

இக்காரணங்களால் கடமையுண்ர்வு இருக்கோ, இல்லையோ, பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் குறைந்து வருகிறது.
படிப்பினால் அறிவு வளரும், ஆற்றல் பெருகும்...அது, பழங்கதை.. தற்போது, பொய், பித்தலாட்டம், நேர்மையின்மை, சூது ஆகியன `முன்னேற்றத்துக்கான, இன்றியமையாதன என்பதே நிதர்சனமான உண்மை என ஆகிவிட்டது. சீரிய சமுதாயம், இந்த போலியான தூண்களின் உருவாவது வருங்கால சந்ததிகளுக்கு கேடு. 
இது மாற வேண்டும்.

அதற்குத் தரமான, பொறுப்பான நிர்வாகம் அமைந்தால் நிலைமை மேன்படும். நேர்மையான த்லைமை வேண்டும்.  வெளிப்படையான நியமன முறை உருவாக வேண்டும். இது, எல்லா அதிகாரமட்டத்திலும் அமையவேண்டும்.  காலதாமதமின்றி, துரிதமாக செயல் படவேண்டும்.  அந்த தலைமை `குடி'யை மூச்சு உள்ளவரை வெறுக்கும் இளை௩ர்களை உருவாக்குவதில் முனைப்பாக செய்ல்பட வேண்டும். முதன்மையான தலைமை எங்கே? தேடுவோம், பிரார்த்தனை செய்வோம், வருங்காலம் சிறந்த முறையில் அமைய வேண்டி..  .  

No comments:

Post a Comment