Monday, 16 January 2017

திருவள்ளுவம், சைவம், ஏறு தழுவுதல், மற்றும் அன்னிய நிறுவன சூழ்ச்சி

சைவ உணவு இயல்பானதா? நம் முன்னோர்கள் கற்காலத்தில் மிருகங்களை வேட்டையாடித்தானே உண்டு உயிர் வாழ்ந்தனர்? அந்த பழக்கங்களை நாம் பின்பற்றுவது இயற்கை சமனிலையானது. நடைமுறைக்கு ஏற்றது என வாதம் செய்வோர் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.  அவர்கள் சொல்லும் ம்ற்றொரு கருத்து, ஆதி ரிஷிகளில் ஒருவரான அகத்தியரும் மாமிசம் உண்டதாக குறிப்புகள் உள்ளனவே. மாமிச உணவில் சத்துக்கள் மண்டிக்கிடக்கின்றனவே. மனித வள்ர்ச்சிக்கு சத்துக்கள் அவசியம்தானே..
அகத்தியர் காலத்தில் பிராயச்சித்தம் கிடைத்தது.  இப்போது அதை சொல்வதற்கே விபரம் அறிந்த பெரியோர் இல்லை.  சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை. இதுதான் எதார்த்தம்.  மாமிசம், நாள்பட்டால் பல நுண்கிருமிகள் உருவாகும் என அறிவியல் கூறுகிறது.  ஆக,மேற்சொன்ன வாதங்கள் பயனற்று போகின்றன.
அனைத்துக்கும் ஐயன் திருவள்ளுவர் துணைக்கு வருகிறார்.  திருக்குறள் கூறுவது என்ன என்பதை பார்ப்போம்.
மாமிசம் இன்பமூட்டுவதில்லை.  ஆகையால், புலால் மறுப்பு, அறத்துப்பாலில், அருளுடைமையில் வைத்துள்ளார், நூலாசிரியர். என்னே ஒரு அமைப்பு?
ஊன் உண்ணுதல் அரவே ஒழிய வேண்டும் என்றே ஆணித்தரமாக உரைக்கிறார்.  சமுதாயக்கேடு, மனித இனம் புலால் உண்ணுதலால் கட்டுகடங்காமல் போகலாம் என்ற நிலையில் புலால் மறுப்பு பற்றி அருள் உடைமைக்கும், தவத்திற்கும் இடையில் 10 குறட்பாக்கள் மூலமாக, நல்லன, தீயன என பாகுத்தாயும் உயர்ந்த அறிவு படைத்த மனித இனத்திற்கு, திருவள்ளுவர் தந்த என்றைக்கும் உயர்வு அளிக்ககூடிய திருக்குறளின் ஒரு சிறு பகுதியான அத்தியாயம் 26 பற்றி ஆராய முற்படுகிறேன்.

தாய்பால், பசுவின் பால் பருக வேண்டும், வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்ததுதானே, அதுவும் ஊன் திரிந்த திரவம்தானே என்ற வாதம் ஆரம்ப நிலையிலேயே ஏற்புடையது அல்ல.  தாய்பால் சுரப்பு இயற்கை அமைப்பு, தாய்க்கும், சேய்க்கும் ஆனது.  பசு, கன்றுகுட்டி இணையும் அவ்வாறே. 
புலால் அல்லது மாமிசம் உயிர்வதையைச் சார்ந்தது.  உயிரின் வலியை அதிகபடுத்தியபின் பெறப்படுவது. மனித இயல்புக்கு மாறானாது.  மாற்று உணவான தாவரமும் உயிர்வகையைச் சார்ந்தது தானே என்போருக்கு, அது எப்படி உயிர்வதை ஆகும்? தாவரம், இயற்கை அமைப்பின் ஐம்பூதங்களை அனுசரித்து உருவாக, வளர பக்குவப்பட்டுள்ளது.
மக்கள் சமுதாயம், அருள் உடைமையுடன் தொடர்ந்து வாழ்வது இயற்கைக்கு நன்மை பயக்கும்.  தாவரங்கள், உணவு சங்கிலியில் மனிதனுக்கும் உணவாகி, இதர உயிரினங்களுக்கும் இரையாகி மண்வளம், நீர்வளம், காற்று சுத்தம் ஆகியன நிலைபெற மனித ஆக்கசக்திக்கும் அப்பாற்பட்டதுதானே. ஆக, தகவமைத்துக்கொள்ளும் மாபெரும் அறிவியல் சார்ந்த, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் தாவர உணவுக்கு ஏதேனும் மாற்று உண்டோ? மனிதனின் சிறு ஈடுபாட்டுடன், தாவர உணவுக்கு தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் உண்டு.  இதை, நிலை நிறுத்த திருவள்ளுவர் கூறுவதைக் காண்போம். 
விலங்கினம், தனக்கு தீங்கு இளைக்காதவனுக்கும், உண்ண மறுக்கிறவனுக்கும், கைகூப்பி தொழுமாம்.  இதுவன்றோ அறம்? (260).
யாரோ கொல்கிறார்.  என்பங்கு உண்ணுவதுதானே, அதனால் என்ன? அறம் குறைந்து விடுமா? என வாதிடுவோருககு, ஊன் உண்ணுதல் பாபம் என்கிறார் (254). உணவாக உட்கொள்வோர் இல்லையாயின் விற்போர் எங்ஙனம்? ஆக, புலால் உண்ணாமை இருவருக்கும் அருள் சேர்க்கிறது (256). ஊன் பிறிதொரு உயிரின் புண்; புண்ணை யாரேனும் உண்பாரோ? (257). அந்த புண்ணை உண்டு, தந்தசை, உடல்பெருக்க எத்தனிப்பது, எங்ஙனம் அருள் பெருகும் உயிர் ஆகும்? (251).  அதற்கு மாற்றாக, ஆயிரம் வேள்வியினால் உண்டாகும் பலன் கிட்டுமோ இல்லையோ, தன்வாய் சுவைக்காக, ஓர் உயிரை கொல்லாமல் தவிர்த்தால் நன்று என போதனை செய்கிறார், ஐயன் (259). ஆயுதம் ஏந்தியவனிடம் இரக்கம் தோன்றாது, அது போல மாமிசருசி கண்டவனிடம் அருள் உருவாகாது என ஐயப்படுகிறார் (253).  அடுத்து, நேரடியாகவே, புலால் உண்ணும் பழக்கத்தை சிறுமனம் படைத்தவருக்கானது; பிற உயிர் கொள்வது பாபம்; அதை தவிர்ப்பது அருள் சுரப்பதற்கு அடிப்படை (254). குற்றமற்ற ஞானம் பெற்ற அறிஞர்கள், உயிரற்ற மாமிசத்தை ஒருபோதும் உணவாக ஏற்கமாட்டார்கள்.  ஞானம் முதிர்ச்சி பெற மாமிசத்தை தவிர்க்க வேண்டுகிறார், பொய்யாமொழி புலவர் (258).  

இறுதியாக, பொருள் இல்லாருக்கு, இவ்வுலகம் இல்லை; அருள் இல்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை; புலால் உண்ணும் உயிருக்கு அருள் கிஞசித்தும் சுரக்க வாய்ப்பே இல்லை என நிச்சயபடுத்துகிறார்.  

இதைவிட வேறு எவ்வாறு தாவர உண்வு பழக்கத்தை போற்றமுடியும்? அறிவியல் பூர்வமாக நோக்கினால், உணவாக பயன்படும் கால்நடை உருவாக்கத்தில் வீணாக்கப்படும் சக்தி மிக அதிகம்; மாறாக, தாவரவகை உணவு, இடும் சக்தியை விட, பெறப்படும் சக்தி அதிகம்.  அறிவியல் முன்னேற்றம் வருங்கால சந்ததியினருக்கு எவ்வளவோ முன்னேற்பாடுகளையும், செழுமையையும் விட்டுச்செல்கிறது.  ஆனால், அதையெல்லாம் வீணனடிப்பது புலால் உண்ணுதலாம்.  தற்போதைய மனித இனத்திற்கு அருள் கிட்டுமோ இல்லையோ, நிச்சயமாக எதிர்வரும் மனித இனம் நம்மை நிந்திக்கும், ஏளனமாக எள்ளிநகையாடும்.  புலால் உண்ணுதலால் எவ்வளவு கேடு என அறிந்தும், மிக்க ஞானம் பெற்றும், ஏன் நம் மூதாதையர் அந்த பழக்கத்தை விட்டொழிக்கவில்லை என எண்ணி புலம்பும்.  

அந்த மனோனிலையில் செய்யும் எந்த நீத்தார்கடனும் தத்தம் மூதாதையர்களை சென்று சேராது.  புலால் உண்ணுதலால் கால்நடைதொகை குறைகிறதோ இல்லையோ, மனித இனமே மிகவும் வலிமையிழந்து நாட்கள் செல்லச்செல்ல வாழ்க்கை சுகமாகவும், ஆனந்தமாகவும் நடைபெறுவதற்கு மாறாக அனைத்து செல்வங்களும், வசதியிருந்தும், விஞஞான வள்ர்ச்சி உச்சம் அடைந்தாலும் நிம்மதியற்ற வாழ்க்கையே மிஞசும்.  பண்பட்ட நாம், அத்தகைய சூழல் உருவாக காரணமாகலாமா? 

நா சுவையா, தசை வளர்பபா, இயற்கைத்தகைமையா, அருள்சுரக்கும் வாழ்க்கைநடைமுறையா என்ற தீர்மானம் நம்கையில். 

No comments:

Post a Comment